எதிர்வரும் ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான, எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், துடுப்பாட்ட சகலதுறை வீரரான 26 வயதான டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ரி-20 உலகக் உலகக்கிண்ணத் தொடரை வென்ற அணியில் மிட்செல் ஸ்வெப்சன் இல்லாததைத் தவிர அணியில் வேறு மாற்றங்கள் ஏதும் இடம்பெறவில்லை.
ரி-20 கிரிக்கெட்டில் உலக அளவில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய டிம் டேவிட், இதுவரை அவுஸ்ரேலியாவுக்காக விளையாடியதில்லை.
இதுவரை அனைத்து 14 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சராசரியாக 46.50 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 158.52 என 558 ஓட்டங்கள்; எடுத்துள்ளார். அதிகப்பட்ச ஓட்ட எண்ணிக்கை 92ஆகும்.
அவர், பிறந்த நாடான சிங்கப்பூருக்காக விளையாடி வருகிறார். அவரது கடைசி சர்வதேச போட்டி மார்ச் 2020ஆம் ஆண்டு ஹொங்காங்கிற்கு எதிராக விளையாடியது ஆகும்.
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான 15பேர் கொண்ட அணியில், ஆஷ்டன் அகர், பெட் கம்மின்ஸ், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வோர்னர் மற்றும் ஆடம் ஸம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ரி-20 உலகக்கிண்ணத் தொடர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகின்றது. மொத்தம் 45 போட்டிகள் நடைபெறுகின்றன.