நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் நடைபெறும் என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.