சிறுபான்மை மக்களை அடக்கி ஆள நினைப்பது நாட்டை பலவீனப்படுத்தும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
The Hindu -விற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
ராஜபக்ஸவினரின் ஆட்சியால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் இந்தியா வழங்கிவரும் உதவிகளுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அணிசேராக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், ராஜபக்ஸக்கள் குறிப்பிட்ட ஒரு நாட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பிற நாடுகளின் இலங்கை மீதான பார்வையை விலகச் செய்த நிலையில், நாடு தற்போது பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.