செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கான எரிபொருள் தேவைகள் தொடர்பில் இன்று(03) மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வர்த்தக மற்றும் நிதி நிர்வாகத்திடம் சரக்கு திட்டங்கள், உறுதிப்படுத்தப்பட்ட சரக்குகள் மற்றும் சரக்குகளை பாதுகாப்பதற்கு தேவையான நிதிகள் என்பன தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 2 மாதங்களுக்கு மசகு எண்ணெய் சுத்திகரிப்புத் தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தொழிற்சாலைகளுக்கான எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகளின் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகளுடன் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.