கடந்த கால ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்து மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்களப்பில் உள்ள காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவுள்ளனர்.
இதற்கமைய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அங்கு சுமார் 100 பேர் சாட்சியமளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு இரண்டு மணிநேர சாட்சியம் பதிவு செய்திருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.