போராட்டம் இடம்பெற்ற காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்ட 80 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நபர்களை கைது செய்வதற்கு இன்டர்போல் போன்றவற்றின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இவர்கள் அனைவரும் பல்வேறு வழிகளில் இவ்வாறு வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர் என கூறப்படுகின்றது.
தங்களுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக போலியான தகவல்களை தூதரகங்களிடம் கூறி இவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்து புகைப்படம் எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பிரசூரித்த பிரபல வர்த்தகர் ஆபிரிக்காவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
இந்தப் போராட்டத்துடன் தொடர்புடைய சுமார் 200 பேர் வெளிநாடுகளுக்கு செல்ல தூதரகங்களிடம் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.