பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய தரப்பினரது அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்த பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை உத்தியோகப்பூர்வமாக ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையில் ஸ்தாபிக்கப்படும் இந்த கூட்டணியின் கொள்கை பிரகடனம் இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி,இடதுசாரி ஜனநாயக முன்னணி,பிவிதுறு ஹெல உறுமய,இலங்கை கம்யூனிச கட்சி,லங்கா சமசமாஜ கட்சி, யுதுகம தேசிய அமைப்பு, விஜய தரணி தேசிய சபை,உள்ளிட்ட 09 அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்ததாக இந்த கூட்டணி ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இதேவேளை பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உட்பட,விமல் அணியினர் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்ததோடு பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒன்றிணைந்து தேர்தல்களில் போட்டியிட போவதில்லை எனவும் அறிவித்தமை குறிப்பிடதக்கது.