வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
100 நாள் செயல்முனைவின் 34 ஆம் நாளாகிய நேற்று முழங்காவில் பிள்ளையார் கோயில் பகுதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
இதன் போது பொதுமக்கள், கிராம அமைப்புகள், மீனவ சங்கங்கள், சிவில் அமைப்புகள் ஒன்று கூடி மூன்று மணித்தியாளம் தங்களுடைய உரிமைக்காக கவனயீர்ப்பில் ஈடுபட்டதோடு குறித்த விடயத்தினை வலியுறுத்தி வில்லிசையும் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.