பீகார் தலைநகர் பாட்னாவை ஒட்டியுள்ள டானாபூர் பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் பயணிகள் படகு மூழ்கியது.
குறித்த படகில் சுமார் 55 பேர் இருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீரில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்ட போதும் அதில் இருந்த 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன அனைவரையும் மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
தொழிலாளர்கள் பணி முடித்து கங்காரா ஆற்றில் படகு மூலமாகத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



















