சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டொலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்யணம் செய்து அறிவித்து வருகின்றன.
சென்னையில் 107 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகின்றன.
இன்று (திங்கட்கிழமை) ஒரு லிட்டர் பெட்ரோல் 102.65 ரூபாயாகவும், ர94.24 ரூபாயாகவும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பல்வேறு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான நிலையங்களில் ‘டீசல் இல்லை’ என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
‘டீசல் இல்லை’ என்ற தகவல் வாகன சாரதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் வரத்து குறைவு, சுத்திகரிப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.