உச்ச நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. கௌலிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
“உச்சநீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். மேலும், தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். சென்னையில் அமைந்துள்ள பல்வேறு பாரம்பரிய கட்டிடங்களை நாம் செம்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும்.
நீதித்துறைக்கு உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பது என்பது வரலாற்றைப் பாதுகாப்பது பேன்றதாகும்.
சென்னை சட்டக் கல்லுரியை புதுப்பிக்க கூடிய பணியால் நான் பெருமைக் கொள்கிறேன். நீதியும் நேர்மையும் தமிழர்களின் வாழ்வியலில் கலந்தவை.“ என நீதித்துறை விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.