போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள 61 ஆயிரம் குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் குறித்த நிவாரண உதவி வழங்கப்படுமென நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.