பலத்த மழை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் வினாடிக்கு 17 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நீர்த்தேக்கத்தின் கீழ்பகுதியை பயன்படுத்தும் மக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், லக்ஷபான நீர்த்தேக்கத்தில் 3 வான்களும், கனியன் நீர்த்தேக்கத்தில் தலா 3 அகழிகள் கொண்ட ஒரு வான்கதவும் திறக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் இதனைத் தெரிவித்துள்ளார்.