மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய தங்களுக்கு விருப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நந்தலால் வீரசிங்க முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார் என குறிப்பிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதி அவரது பதவிக்காலத்தை நீட்டித்தார் எனவும் குறிப்பட்டுள்ளார்.
அத்துடன், மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய முயல்வதாக எதிர்க்கட்சியினர் இந்த நாட்டுக்கு காட்ட முயற்சிக்கின்றனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்கட்சியினருக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா என தெரியவில்லை எனவும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.