170 மில்லியன் இலங்கை ரூபாய் (சுமார் 463,215 அமெரிக்க டாலர்) மதிப்புடைய 1000 மெட்ரிக் தொன் வெள்ளை அரிசி மியன்மார் அரசாங்கத்தால் இலங்கை அரசாங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
மியன்மாரின் யாங்கூனில் உள்ள ஆசிய உலக துறைமுக முனையத்தில் நடைபெற்ற விழாவில், மியன்மார் அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சர் யு.ஆங் நைன் ஓ, இலங்கையின் தூதுவர் ஜனக பண்டாரவிடம் இந்த அரிசியை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்த சவாலான சூழ்நிலையில் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை வழங்கி பெருந்தன்மை காட்டிய மியன்மார் அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாக ஜனக பண்டார தெரிவித்தார்.
இந்த அரிசி ஏற்றுமதி இம்மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இம்மாத இறுதியில் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.