ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் உறுதியளிக்கவில்லை என்பதை உணர்த்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களில் மூன்று பேர் கடுமையான உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்று கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்,
லொஹான் ரத்வத்தே, சனத் நிஷாந்த ஆகியோர் மீதே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மோசமான அமைச்சு நியமனங்கள் மற்றும் அமைதியான எதிர்ப்புக்களுக்கு அதன் கடுமையான பிரதிபலிப்பு, இலங்கையின் உரிமைகள் நிலைமை வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை தொடர்பில், இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.