வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை டி.வி.சானக்க நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து ஒரு மணித்தியாலத்திற்கு பின்னர் இந்த விடயத்தை அவர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை டி.வி.சானக்கவிற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக இந்திக்க அனுருத்த ஜனாதிபதி முன்னிலையில் நேற்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.