கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து 2024இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின் முதலீட்டாளர்களான Colombo West International Terminal Private Company தெரிவித்துள்ளது.
துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போதே இந்த விடயம் குறித்து அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
700 மில்லியன் டொலர்கள் செலவில் கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை 2025ஆம் ஆண்டு நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.