படையினரின் எதிர்த்தாக்குதல் தொடர்வதால் ரஷ்யாவிடமிருந்து இன்னும் அதிகமான நிலப்பரப்பை மீண்டும் தாம் கைப்பற்றியுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மற்றும் தெற்கில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்து உக்ரேனிய படையினர் 6,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மீள கைப்பற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கார்கிவ் பிராந்தியத்தில் முக்கிய நகரங்களை இழந்ததை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ஏழு மாத கால யுத்தத்தில் மொஸ்கோவின் மோசமான தோல்வியாக இது கருதப்படுகின்றது.
மேலும் பலர் கைதிகளாக பிடிபட்டுள்ளதாகவும் அவர்களை ரஷ்ய படையால் முன்னர் கைது செய்யப்பட்ட உக்ரேனிய வீரர்களுக்கு பதிலாக மாற்றப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதேவேளை எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டபோதும் உக்ரேனியப் படைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்திய நாட்களில், உக்ரேனிய படைகள் பெரிய லண்டனை விட இரண்டு மடங்கு பெரிய பகுதியைக் கைப்பற்றியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.