இலங்கையின் கடனை மறுசீரமைக்க சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசகர் லசார்ட் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடன்பாட்டை எட்டுவதே அதன் நோக்கமாகுமென பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரனகுறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தேவையான நிதி நிவாரணங்களை பெறுவதற்கு நாட்டில் கடன் மறுசீரமைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம், நிதி ஆலோசகர்களான ‘லாசார்ட்’ இன் சேவைகளைப் பெறுவதற்கு இலங்கை அதிகாரிகள் தீர்மானித்ததுடன், சர்வதேச சட்ட ஆலோசனை நிறுவனமான ‘கிளிஃபோர்ட் சான்ஸ்’ நிறுவனமும் நாட்டில் கடன் மறுசீரமைப்புப் பணிகளுக்கு ஆதரவளித்து வருகிறதென தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் கடன் 85 பில்லியன் டொலர் முதல் 100 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.