சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே
அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்படி, அமைச்சரவை, எதிர்க்கட்சித் தலைவர், கோப் மற்றும் கோபா உள்ளிட்ட நிதிக் குழுக்களின் தலைவர்களுக்கு குறித்த ஒப்பந்தம் முன்வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அதனை மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் அவை அனைத்தும் எதிர்காலத்தில் முன்வைக்கப்படும் என்றும் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.