அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் நீக்கப்பட வேண்டும் என ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானில் சமர்கண்ட் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியிடம் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த இன்னும் நேரம் வரவில்லை. தடைகளை அகற்றுவது பாதுகாப்புத் தீர்மானத்துடன் இருக்க வேண்டும். ஈரான் இஸ்லாமிய குடியரசின் மீது சில அரசியல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே, இந்த பாதுகாப்பு சிக்கல்களை நாங்கள் இறுதி செய்ய வேண்டும்.
உத்தரவாதங்களைப் பொறுத்தவரை, எங்களிடம் நம்பகமான உத்தரவாதங்கள் இருந்தால், தடைகளை நிரந்தரமாக அகற்றுவது இறுதிசெய்யப்படும். மேலும் பாதுகாப்பு சிக்கல்களுக்கு நீடித்த தீர்வு இருந்தால், நிச்சயமாக உடன்பாட்டை எட்டுவது சாத்தியமாகும்’ கூறினார்.