மியன்மார் நாட்டில் சிக்கி தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்களை மீட்டு, தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் தனியார் ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து சென்றதும், பிறகு ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை செய்வதற்காக, மியன்ாமருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்த வேலையை செய்ய மறுப்பதால் அவர்கள் கடுமையாக தாக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது என்றும், 17 தமிழர்கள் மாநில அரசுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே மியன்மார் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.