அத்தியாவசியமான 383 மருந்துகளில் 92 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாக ஒப்புக்கொண்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 14 அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த 14 முக்கிய மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் கையிருப்பில் இல்லை என்றும் அவை சுற்றளவில் கிடைக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு கட்டுப்பாட்டை மீறவில்லை என்றும் அத்தகைய மருந்துகளுக்கு மாற்று மருந்துகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மருந்துப் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க முடியும் என்றும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மருந்து இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.