இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்றதன் பின்னர் முதன்முதலாக வெளிநாடொன்றுக்கு பயணம் செய்துள்ளார்.
இந்தப் பயணமானது, பிரித்தானிய மகாரணியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதாக அமைந்திருந்தது.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக லண்டன் சென்றிருந்த அவர் இந்திய அரசின் சார்பில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் தனது மரியாதையை செலுத்திய ஜனாதிபதி முர்மு, அங்கு இறுதிச் சடங்கிலும் பங்கேற்றார்.
இந்திய அரச தலைவர், சுமார் 500 உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய அரச குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் கூடிய அரங்கிலும் பிரசன்னமாகியிருந்தார்.
பிரித்தானியப் பிரதமர் லிஸ் ட்ரஸ் மற்றும் கொமன்வெல்த் பொதுச்செயலாளர் பரோனஸ் பாற்ரிசியா ஸ்காட்லாண்ட் ஆகியோர் இறுதிச் சடங்கில் பங்கேற்றிருந்தனர்.
யார்க் பேராயர், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயர், ஸ்காட்லாந்து திருச்சபையின் பொதுச் சபையின் மொடரேட்டர் மற்றும் இலவச தேவாலயங்களின் நடுவர் ஆகியோர் பிரார்த்தனைகளை மேற்கொண்டிருந்ததோடு இறுதி நாள் பிரசங்கத்தை கேன்டர்பரி பேராயர் வழங்கினார்.
1965 இல் பிரிட்டனின் போர்க்கால பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் உயிரிழந்ததன் பின்னர் 57 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடைபெற்ற மிகப்பெரிய அரச இறுதி ஊர்வலமாக மகாரணியின் இறுதி நிகழ்வு காணப்படுகின்றது.
அதேநேரம் மாகாரணியின் உடலம் மறைந்த மன்னர் வின்ட்சர் கோட்டையில் உள்ள தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த நடவடிக்கைக்கான குறியீட்டுப் பெயரான ஒபரேஷன் லண்டன் பாலத்தின் நீண்டகாலத் திட்டமிடலில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு மன்னர் சார்ள்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.