ஐ.நா உச்சி மாநாட்டின் போது, உக்ரைனில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரித்தானிய வெளியுறவுச் செயலர் ஜம்ஸ் க்ளெவர்லி நீதியைக் கோருவார்.
அத்துடன், அவர் முதல்முறையாக இன்று (வியாழக்கிழமை) நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா உச்சி மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்திப்பார்.
அத்துடன், பிரதமர் லிஸ் ட்ரஸ் தலைமையிலான பிரித்தானியா தூதுக்குழுவின் ஒரு பகுதியாக கலந்துகொள்ளும் ஜேம்ஸ், சட்டசபையில் உரையில் உக்ரைனுக்கு ஆதரவைத் திரட்டுவார்.
ரஷ்ய ஜனாதிபதியின் அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் இராணுவ வீரர்களின் அணிசேர்ப்பு அழைப்பு ஆகியவற்றால் இந்த அரங்கம் அதிர்ந்துள்ளது.
எனினும், விளாடிமிர் புட்டினின் இந்த நடவடிக்கை, உக்ரைன் மீதான அவரது படையெடுப்பு தோல்வியடைந்து வருவதை தெளிவான ஒப்புக்கொண்டுள்ளதனை தெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என பிரித்தானியா கூறியுள்ளது.