அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் போது அலுவலகத்திற்கு பொருத்தமான உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த சுற்றுநிருபம் எதிர்வரும் 26ஆம் திகதி வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பிலான சுற்று நிருபத்தினை தயாரிப்பதற்குரிய ஆலோசனை உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சேலை உள்ளிட்ட ஆடைகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இந்த சுற்றறிக்கை வெளியிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் அலுவலக உடைகள் தொடர்பான தற்போதைய சுற்றறிக்கையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.