தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிர்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால், சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
உக்ரைனுக்குப் பாகிஸ்தான் ஆயுத உதவி வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை அந்தத் தகவல் உறுதியானால், அது ரஷ்யா- பாகிஸ்தான் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று இந்தியாவுக்கான ரஷிய தூதர் டெனிஸ் ஆலிபோவ் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கான வருவாயையும், உக்ரைன் போருக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தையும் கட்டுப்படுத்த ரஷ்யாவின் கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பொருள்களின் விலைக்கு வரம்பு விதிக்கும் யோசனையை ஜி-7 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.