அஹுங்கல்ல, போகஹபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) போகஹாபிட்டிய, உரகஹா வீதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றைய நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர்கள் தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு 12 போர் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்தில் 5 வெற்றுக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.