உலகளவில் புதிய முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தை நோக்கி விரைந்துள்ள நிலையில், டொலருக்கு நிகரான பவுண்ட், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
ஸ்டெர்லிங் பவுண்ட், திங்கட்கிழமை ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிந்து 1.0327 பவுண்டாக இருந்தது.
திறைசேரியின் தலைவர் குவாசி குவார்டெங், 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகப்பெரிய வரிக் குறைப்புத் திட்டத்தை வெளியிட்ட பிறகு 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய வீழ்ச்சியைக் கண்டது.
45 பில்லியன் பவுண்டுகள் வரி குறைப்பு தொகுப்பு பொது நிதி நிலைத்திருக்குமா என்பது குறித்த தீர்ப்பை சந்தை வழங்கியுள்ளது.
ஆசிய வர்த்தகத்தில் திங்கட்கிழமை தொடக்கத்தில் 1985ஆம் ஆண்டு பெப்ரவரியில் அமைக்கப்பட்ட 1.054 பவுண்டகள் என்ற கிரீன்பேக்கிற்கு எதிராக பவுண்ட் அதன் எல்லா நேரத்திலும் இல்லாத அளவுக்கு கீழே சரிந்தது.
ஆற்றல் நெருக்கடி அல்லது உக்ரைனில் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் குளிர்காலம் நெருங்கி வருவதால், மந்தநிலையின் அபாயம் குறித்த முதலீட்டாளர்களின் கவலைகளுக்கு மத்தியில், ஆசிய வர்த்தகத்தில் டொலருக்கு எதிராக யூரோ 20 ஆண்டுகளில் புதிய வீழ்ச்சியை எட்டியுள்ளது.