பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தால் முக்கியமான இறக்குமதி ஒப்பந்தங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அல்லது இரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய விமானப்படை தற்போது ‘மேக் இன் இந்தியா’ பாதையின் கீழ் அதன் சீட்டா என்ற திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது.
இலட்சிய திட்டமான சீட்டாவின் கீழ், இந்திய விமானப்படையானது இஸ்ரேலின் ‘ஹெரான்’ ஆளில்லா வான்வழி விமானங்களை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தகவல் தொடர்பு வசதிகள் மற்றும் நீண்ட தூரத்தில் இருந்து எதிரி நிலைகளை குறிவைக்கும் ஏவுகணைகளுடன் இந்த ட்ரோன் விமானங்களை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் படி, இஸ்ரேலிய ஆயுத உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களை பாதுகாப்பில் ஈடுபடுத்துவதன் மூலம் அதன் ட்ரோன்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் சிறந்த கண்காணிப்பு மற்றும் உளவுப் கட்டமைப்புக்களுடன் காணப்படுகின்ற நிலையில் அவற்றை இணைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்னூப்பிங் திறன்களை மேம்படுத்துவதன் மூலம், தரையிலுள்ள படைகள் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய பகுதிகளில் உள்ள மறைவிடங்கள் பற்றிய உளவுத் தகல்களை துல்லியமாகப் பெறமுடியும்.
இந்த மேம்படுத்தல்கள் தரை நிலையங்களை தொலைதூரத்தில் இருந்து இந்த விமானங்களை இயக்கவும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு மூலம் கட்டுப்படுத்தவும் உதவும்.
மேம்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள விமானங்களின் கண்காணிப்பு திறன்கள், தற்போது இராணுவத்துக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அவசரகால அதிகாரத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.