ஜம்மு – காஷ்மீர் அரசு, மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்குவதற்காகவும், மாணவர்களுக்கு கல்வியை வழங்குவதற்காகவும், மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இற்கமைவாக, பி.எஸ்.சி. தாதியர் கல்லூரிகள் உட்பட பல மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால் மருத்துவக் கல்வி வசதியை சமூக ஊடகம் வாயிலாக மாணவர்கள் எளிதாக அணுக முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், ஜம்மு மாகாணத்தில் ஏழு அரசு தாதியர் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் இரண்டு கல்லூரிகள் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீர் முழுவதிலும் தலா ஐம்பது மாணவர்களைக் கொண்ட இரண்டு தாதியர் கல்லூரிகள் மட்டுமே இருந்தன.
ஆனால் பி.எஸ்.சி பட்டப்படிப்பு இருந்திருக்கவில்லை. இதனால் தாதியர் பட்டப்படிப்புக்களுக்காக வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.
இந்த தாதியர் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு, அரசு 60 கோடி, ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, இதில் ஒவ்வொரு கல்லூரிக்கும் முதல் தவணையாக 3.75 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்னூர், உதம்பூர், ரியாசி, தோடா மற்றும் கிஷ்த்வாரில் தலா ஒன்று உட்பட ஐந்து பட்டப்படிப்பு மருத்துவ கல்லூரிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.
2021-2022 முதல் தொகுதி ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது அங்கம் விரைவில் தொடங்கவுள்ளது.
கிஷ்த்வார் மற்றும் கங்யாலிலும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த ஏழு புதிய தாதியர் கல்லூரிகளில் 450 மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத் துறையில் புதிய உட்கட்டமைப்பை உருவாக்குவதில் ஜம்மு-காஷ்மீர் விரைவில் மருத்துவக் கல்விக்கான சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் கடந்த பெப்ரவரியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 2022-2023 ஆம் ஆண்டிற்காக 13.33 பில்லியன் டொலர்கள் வரவுசெலவுத்திட்டத்தினை தாக்கல் செய்தார்.
இமயமலைப் பகுதியில் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றையும் குறித்த வரவு செலவுத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.