ரஷ்யாவின் நோர்ட் ஸ்ட்ரீம் குழாய் திட்டத்தின் இரண்டு மிகப்பெரிய கசிவுகளின் நிறுவல்களைச் சுற்றி பாதுகாப்பை அதிகரிக்கப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவை ரஷ்யாவிற்கும் ஜேர்மனிக்கும் இடையிலான குழாய்களில் ஏற்பட்டுள்ள சேதம் வேண்டுமென்ற உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளன. ஆனால் ரஷ்யாவை நேரடியாக குற்றம் சாட்டவில்லை.
முன்னதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள ரஷ்யா, இந்த சேதத்தின் பின்னணியில் அமெரிக்கா உள்ளதா என கேள்வியெழுப்பியுள்ளது.
உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளுக்கு எதிராக எரிவாயு விநியோகத்தை ஆயுதமாக பயன்படுத்தியதாக ரஷ்யா மீது முன்பு குற்றம் சாட்டப்பட்டது.
நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2 குழாய்களில் கசிவுகள், திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது நோர்ட் ஸ்ட்ரீம் 2 திட்டம் கைவிடப்பட்டதால், செப்டம்பரில், பராமரிப்பு தேவை என்று கூறி, நோர்ட் ஸ்ட்ரீம்-1 ஐ ரஷ்யா மூடியது.
டென்மார்க் எரிசக்தி அமைச்சர் டான் ஜோர்கென்சன் இதுகுறித்து கூறுகையில், குழாய்களில் இருந்து வெளியேறும் வாயு குறைந்தது ஒரு வாரத்திற்கு நீடிக்கும் மற்றும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என கூறினார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்த கசிவு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால், இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படுமென கூறினார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ‘ரஷ்யா மீதான குற்றச்சாட்டுக்கள முட்டாள்தனமானது மற்றும் அபத்தமானது என கூறி நிராகரித்துள்ளார்.