வடக்கு அயர்லாந்தில் உள்ள குடும்பங்களுக்கு நவம்பர் மாதம் 400 பவுண்டுகள் எரிசக்தி ஆதரவு தள்ளுபடி கிடைக்கும் என பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள குடும்பங்கள் மின் கட்டணத் தள்ளுபடியைப் பெறும் அதே திகதியில் ஒக்டோபர் 1ஆம் திகதிக்குப் பணம் செலுத்தப்படும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
அத்துடன், சர்ச்சைக்குரிய மினி-பட்ஜெட் பற்றிய விமர்சனங்களை ட்ரஸ் நிராகரித்தார்.
திறைசேரியின் தலைவரின் அறிவிப்புகள் ஸ்டெர்லிங்கின் மதிப்பில் பாரிய வீழ்ச்சிக்கும், கடன் வாங்கும் செலவுகள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்தது.
இது வீட்டு உரிமையாளர்களுக்கான அதிகரித்த அடமானக் கொடுப்பனவுகள் பற்றிய கவலைகளையும் எழுப்பியது.
இதுதொடர்பாக லிஸ் ட்ரஸ் கூறுகையில், ‘மக்கள் 6,000 பவுண்டுகள் வரை எரிசக்தி கட்டணம், அதிக பணவீக்கம் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றை எதிர்கொள்வதால் நாங்கள் தீர்க்கமான நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாங்கள் எடுத்த நடவடிக்கையானது, இந்த குளிர்காலத்திலும் அடுத்த குளிர்காலத்திலும் ஒரு வழக்கமான எரிசக்தி கட்டணத்தில் 2,500 பவுண்டுக்கு மேல் மக்கள் செலுத்துவதை உறுதி செய்யும், மேலும் இது பணவீக்கத்தை 5 சதவீதம் வரை குறைக்க உதவும்.
வடக்கு அயர்லாந்தில் உள்ள மக்களுக்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மிகக் கடுமையான மந்தநிலையைத் தவிர்க்க பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என கூறினார்.