அமைச்சுப் பதவிகளை அதிகரிப்பது பேராபத்து என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய சபையில் பங்கேற்காமல் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வணக்கம் செலுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு தவறான கருத்தை ஏற்படுத்துவதே தேசிய சபையின் நோக்கமாகும் என அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிகளுக்கு தேசிய பேரவை சேவையாற்றாது எனவும் சுதந்திரக் கட்சி விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.