யாழ். கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தீடீர் சுற்றிவளைப்பு கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். கோட்டை பகுதியை நேற்றைய தினம் பார்வையிட்ட மாநகர முதல்வர் அங்கு இடம்பெற்றுவரும் அநாகரிக செயற்பாடுகளை கேட்டறிந்துகொண்டதுடன் நேரடியாக அதனை அவதானித்தார்.
யாழ். கோட்டை பகுதி சமூகச் சீரழிவு நடவடிக்கைகள் மற்றும் போதை பொருள் பாவனை மையமாக மாறிவருகின்றதோடு சுற்றியுள்ள பற்றைக் காடுகளை அகற்றுமாறு நீதிபதிகள் யாழ் மாநகர சபையிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். .
மேலும் தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்குள் இருப்பதால் தொல்லியல் திணைக்களத்தினருடன் பேசி இதற்கான நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.