சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை, ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்வழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து விவாதம் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று முதல் அரசாங்க விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்கான நேரத்தை அரை மணித்தியாலம் நீடிக்கவும் சுயேட்சை உறுப்பினர்களுக்கு கருத்து தெரிவிக்க அந்த நேரத்தை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மாலை 4.30 மணியுடன் முடிவடையவுள்ள அரசாங்க விவகாரங்கள் மீதான விவாதத்திற்கான நேரம் மாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாலை 5.30 மணி வரை மீதமுள்ள 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தவும் ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு ஒரு நாள் ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.