பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவில் (கோப்) இருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்ததையடுத்து அந்த வெற்றிடத்திற்கு பேராசிரியர் சரித ஹேரத்தின் பெயரை எதிர்க்கட்சியினர் பரிந்துரைத்துள்ளனர்.
கலாநிதி ஹர்ஷ டி சில்வா தனது சொந்த விருப்பத்தின் பேரில் இராஜினாமா செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதனையடுத்து, வெற்றிடமாகவுள்ள ஆசனத்திற்கு முன்னாள் கோப் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத்தை நியமிக்க எதிர்க்கட்சி விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்படும் வரை கோப் குழுவின் தலைவராக சரித ஹேரத் கடமையாற்றியதோடு, பின்னர் அந்தக் குழுக்கள் கலைக்கப்பட்டன.
ஹேரத்தின் தலைமையின் கீழ் கோப் குழு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட அரச நிறுவனங்களில் உள்ள பல முரண்பாடுகளை ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.