இதுவரை சுமார் 5 இலட்சம் பேருக்கு நிரந்தர ஓட்டுநர் உரிம அட்டை வழங்க முடியவில்லை என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உரிய அட்டைகள் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சுமார் 10 இலட்சம் அட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல் தொகுதியாக 5 இலட்சம் அட்டைகள் இம்மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக 43 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.