பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பொறுப்புடன் செயற்படுமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து நபர்களும் சட்டத்தின் சமமான பாதுகாப்பிற்கு உரித்துடையவர்கள் எனவும், அரசியல் கருத்தின் அடிப்படையில் எந்தவொரு குடிமகனுக்கும் பாகுபாடு காட்டக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.