உள்ளூர் பால் மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க பால் மா உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றில் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 950 ரூபாவாகும்.
அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முழு ஆடைப் பால்மா கிலோவொன்றின் விலை 230 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாகும்.
ஆடை நீக்கப்பட்ட பால்மாவின் விலை 210 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய ஆயிரத்து 50 விலை ரூபா என உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.