கோப் குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
பெரும்பான்மை வாக்குகளுடன் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (COPE) தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பதவியை முன்னர் பேராசிரியர் சரித ஹேரத் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.