2022ஆம் ஆண்டுக்கான ஜாம்பவான் லீக் ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று இந்தியா கெபிடல்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இரண்டாவது முறையாக நடைபெற்ற இத்தொடரில், முதல் சம்பியன் பட்டத்தை இந்தியா கெபிடல்ஸ் அணி கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இறுதிப்போட்டியில், இந்தியா கெபிடல்ஸ் அணியும் பில்வாரா கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பில்வாரா கிங்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரோஸ் டெய்லர் 82 ஓட்டங்களையும் ஜோன்ஸன் 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பில்வாரா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், ராகுல் ஷர்மா 4 விக்கெட்டுகளையும் பனேசர் 2 விக்கெட்டுகளையும் பிரீஸ்னன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 212 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பில்வாரா கிங்ஸ் அணி, 18.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனால், இந்தியா கெபிடல்ஸ் அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷேன் வொட்சன் 27 ஓட்டங்களையும் ஜெசல் கரியா 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியா கெபிடல்ஸ் அணியின் பந்துவீச்சில், பவன் சுயால், பிரவீன் தம்பே மற்றும் பான்க் ராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மிட்செல் ஜோன்சன், லியாம் பிளெங்கெட் மற்றும் ராஜத் பாத்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக ரோஸ் டெய்லரும், தொடரின் நாயகனாக யூசுப் பதானும் தெரிவுசெய்யப்பட்டனர்.