நாடாளுமன்றில் இன்றும் நாளையும் இடம்பெறவிருந்த அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக தீர்மானிக்கப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.