எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல், தனியார் விமானத்திலும் செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆகாசா எயார்’ என்ற தனியார் விமான நிறுவனமும் தங்கள் விமானங்களில் செல்லப்பிராணிகளை கொண்டுச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கேபின் அல்லது சரக்கு பெட்டியில் பயணிக்க செல்லப்பிராணிகளை கொண்டு செல்லலாம் என ‘ஆகாசா எயார்’ விமான நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கான முன் பதிவு ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஆகாசா எயார் விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பின் மூலம் 7 கிலோ வரை எடை கொண்ட செல்லப் பிராணிகள் வானில் பறக்க அனுமதி கிடைத்துள்ளது.
எயார் இந்தியாவிற்கு பிறகு இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா எயார் செல்லப் பிராணிகளை விமானத்தில் அனுமதித்துள்ளது.