அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
டொலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து 82.33 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. முந்தைய அமர்வில் ரூபாயின் மதிப்பு 81.88 ரூபாயாக இருந்தது.
அமெரிக்க மத்திய ரிசர்வ் பெஞ்ச்மார்க் வட்டி வீதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியது முதல் இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டுப் பயணச் செலவு அதிகமாகும் அபாயம் உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.