சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு சென்றுள்ளது.
உலக வங்கியின் வருடாந்த மாநாடு இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்போது, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிதி மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான குழுவில், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோரும் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடதக்கது.