இலங்கைக்கு கடந்த செப்டெம்பர் மாதம் மாத்திரம் 29 ஆயிரத்து 802 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், 5 இலட்சத்து 26 ஆயிரத்து 232 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இது 2021ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 1287.6வீத வளர்ச்சியாகும் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி முதல் செப்டெம்பர் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கையின் வருமானம் 946.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.