சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, புதிய சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்தல் அல்லது செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்தல் ஆகியவற்றுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அத்தோடு, சாரதி அனுமதிப்பத்திர எழுத்துத் தேர்வு, நடைமுறைத் தேர்வு ஆகியவற்றுக்கான கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கான இணைய சேவைகளுக்கான கட்டணங்கள் அமெரிக்க டொலர்களில் அறவிடப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது.