மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கி வரும் பாரிய சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான குழுவினர் வொஷிங்டனுக்கு சென்றுள்ளதுடன், நேற்று மாநாடு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.